தெய்வப்புலவர் - திருவள்ளுவர்

திருக்குறள் சிறப்புகள்:

  • தமிழ் மொழியில் இந்த நூல் இயற்றப்பட்டிருந்தாலும் இதில் தமிழ் என்ற சொல் எந்த குரலிலும் இடம் பெறவில்லை. அதே போல கடவுள் என்ற சொல்லும் இடம்பெறவில்லை.
  • திருக்குறளில் மொத்தம் 14,000 சொற்கள் உள்ளன.
  • திருக்குறளில் மொத்தம் 42,194 எழுத்துக்கள் உள்ளன.
  • திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
  • நெருஞ்சிப்பழம் என்ற பழவகை மட்டுமே திருக்குறளில் இடம்பெற்றுள்ளது.
  • பனை, மூங்கில் ஆகிய மரங்கள் மட்டுமே திருக்குறளில் இடம்பெற்றுள்ளது.
  • ஒரு குறளில் “பற்று” என்ற சொல் ஆறு முறை இடம்பெற்றுள்ளது. இதுவே ஒரே குளிரில் அதிகப்படியாக வரும் சொல் ஆகும்.
  • குறிப்பறிதல் என்ற அதிகாரம் மட்டுமே திருக்குறளில் இருமுறை வருகிறது.

தெய்வப்புலவர் என்று போற்றப்படும் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது திருக்குறள். இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் 1330 திருக்குறள் உள்ளன. இவை அனைத்தும் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளுக்குள் வருகின்றன.

தமிழ் மொழி இலக்கியங்களில் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாக விளங்குகிறது திருக்குறள். வாழ்வியல் நூலான திருக்குறளிற்கு பொய்யாமொழி, முப்பால், உலகப்பொதுமறை, தெய்வநூல் , வாயுறைவாழ்த்து, உத்தரவேதம் இப்படி பல பெயர்கள் உண்டு. கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த நூல் இயற்றப்பட்டிருக்க கூடும் என்று ஆவாளர்கள் கருதுகின்றனர். அத்தகைய காலகட்டத்திலேயே யுகங்களை கடந்த பல சிந்தனையியோடு இந்த நூலை இயற்றியுள்ளார் திருவள்ளுவர்.

திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரை பற்றிய முழுமையான விவரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் இவரை பற்றிய செய்திகள் செவி வழியாக பல நூற்றாண்டுகளை கடந்து இன்றும் நமது காதுகளில் ஒலிக்கின்றன. அதன் படி, இவர் சென்னையில் உள்ள மைலாப்பூர் பகுதியில் வாழ்ந்ததாகவும், இவரின் மனைவி பெயர் வாசுகி என்றும் கூறப்படுகிறது. கற்பிற்கு ஒரு மிக சிறந்த இலக்கணமாக வாசுகி விளங்கினார் என்று கூறப்படுகிறது. இந்த நூலின் ஆசிரியரான திருவள்ளுவருக்கு தெய்வப்புலவர், பொய்யில் புலவர், பெருநாவலர் என்று பல பெயர்கள் உள்ளன.

ஒரு மனிதனின் வாழ்விற்கு தேவையான அனைத்தையும் மூன்று பால்களாக பிரித்து அதை 1330 குறள்களாக இயற்றியுள்ளார் வள்ளுவ பெருந்தகை. திருக்குறளில் மொத்தம் மூன்று பால்கள் உள்ளன. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் அல்லது இன்பத்துப்பால். இப்படி மூன்று பால்களையும் ஒன்றிணைத்து அழகுற இயற்றப்பட்டதால் திருக்குறளிற்கு முப்பால் என்றொரு பெயர் உண்டு.

இந்த முப்பாலும் மேலும் ‘இயல்’ என்று பகுக்கப்பட்டு ஒவ்வொரு இயலிற்கு கீழ் சில அதிகாரங்கள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அதிகாரத்திற்கு கீழும் 10 குறள்கள் என்று தொகுக்கப்பட்டு, மொத்தம் 1330 குறள்களோடு இந்த நூல் உலகபுகழ்பெற்று விளங்குகிறது. இதில் உள்ள ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளை கொண்டுள்ளது. முதல் அடியில் நான்கும் சீரும் இரண்டாம் அடியில் மூன்று சீரும் என மொத்தம் ஏழு சீர்கள் உள்ளது.