முதலுரை பற்றி

முதன்முதலாக 1799 ஆம் ஆண்டில் பாளையங்கோட்டையிலிருந்து வந்த கிறிஸ்தவ மதகுருமார்களால் முதல் கிராமமாக" முதலூர் "என்ற பெயரில் நிறுவப்பட்டது. கிராமத்தின் முதல் குடிமகன் தாவீது சுந்தரானந்தன்," அடைக்கல பட்டணம் "என்ற மாதிரியான ஒரு கிறிஸ்தவ குடியேற்றத்தை உருவாக்க முயன்றார். தாவீது சுந்தரானந்தன் மற்றும் கேப்டன் எவரெட்டின் தாராள நன்கொடையால், ஆகஸ்ட் 1799 ஆம் ஆண்டில் கேப்டன் எவரெட்டின் பெயரில் ஒரு செவ்வக பகுதி வாங்கப்பட்டது.

முதலூரில் இருந்த கிறிஸ்தவர்களை கிறிஸ்தவர்கள் அல்லாதோர் தொடர்ந்து தாக்கினர். கிராம மக்கள் அழிக்கப்படுவதை தடுக்க, தாவீது சுந்தரானந்தன் முதலூரில் இளைஞர்களுடன் இணைந்து "சிலம்பம்" என்ற இந்திய தற்காப்புக் கலையை கற்றுக் கொண்டார். சிலம்ப அணிக்கு "தடிகம்பு சேனை" என பெயரிடப்பட்டது. எனவே, தாவீது சுந்தரானந்தன் "தடிகம்பு தாவீது சுந்தரானந்தன்" மற்றும் "முதலூர் சிங்கம்" என்று அழைக்கப்பட்டார். தாவீது சுந்தரானந்தன் திருநெல்வேலி திருமண்டலத்தின் முதல் இரத்த சாட்சியாக மரித்தார்.

தூய மிகாவேல் முதலான சகல தேவதூதர்களின் ஆலயம்:

1799 ல் பனைமரத்தால் கட்டப்பட்ட கிராமத்தின் முதல் தேவாலயம் கிறிஸ்தவர்கள் அல்லாதோர்களால் எரிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, மறுபடியும் சத்தியநாதன் அவர்களால் இரண்டாவது முறை தேவாலயம் கட்டப்பட்டது. 1816 ஆம் ஆண்டில் செங்கல் மற்றும் மோட்டார் மூலம் மூன்றாவது முறை தேவாலயம் கட்டப்பட்டது. தாவீது சுந்தரானந்தன் இறந்தபின், போதகர் அருள்திரு HB நார்மன் அவர்கள் முதுலூர் கிராமத்திற்கு சிறந்த சேவையை வழங்கினார். அவர் ஒரு சிறந்த கட்டிடக் கலைஞராகவும் இருந்தார், மேலும் அவர் இரண்டு ஆண்டுகளுக்குள் மேற்கத்திய பாணியிலான ஒரு பெரிய தேவாலயத்தை கட்டினார். ஒரேநேரத்தில் 2,000 க்கும் அதிகமான மக்கள் ஒன்றுகூடி வழிபாடு நடத்த ஏற்ற இடவசதி உள்ளது. 1883 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதி பரிசுத்த ஆண்ட்ரூஸ் திருநாளில் பிஷப் சர்கண்ட் என்பவரால் தேவாலயம் அர்ப்பணிக்கப்பட்டது. தேவாலயத்தின் நீளம் 152 அடி, அதன் அகலம் 63 அடி. ஒரு அழகிய பரிசுத்த தலம்(altar) நான்கு அடி உயரத்தில் உள்ளது மற்றும் பாடகர்குழுக்கு என்று ஒரு பிரத்யேக இடம் உள்ளது.

போதகர் அருள்திரு HB நார்மன் அவர்கள் கட்டிய தேவாலயம் முதுலூர் மக்களால் ஏழு மாடிகளைக் கொண்ட 193 அடி உயர தேவாலயமாக புதுப்பிக்கப்பட்டது. கோபுரத்தின் உச்சியில், தங்க சிலுவை கொண்ட ஒரு கிரீட கல் வைத்து அலங்கரிதனர். புதிய தேவாலய கோபுரம் 29 செப்டம்பர் 1929 (புனித மைக்கேல் தினம்) அன்று அர்ப்பணிக்கப்பட்டது.

முதுலூர் தேவாலயத்தில் சில தனித்துவமான கட்டிடக்கலை அம்சங்கள் உள்ளன. விவிலிய நூல் படி, ஏழு எண் "பரிபூரணத்தின் முழுமை" அல்லது "முழுமையானது" எனக் குறிக்கிறது. தேவாலய கோபுரம் ஏழு மாடிகள் உள்ளன, உள் தேவாலயத்தில் ஏழு தூண்கள் உள்ளன, ஒவ்வொரு பக்கத்திலும் ஏழு வளைவுகள் உள்ளன. இங்கு உள்ள பரிசுத்த தலதில் ஏழு படிகள் உள்ளன, பரிசுத்த தலதிலன் குறுக்கே ஏழு பக்கங்களில் ஏழு மெழுகுவர்த்திகள் உள்ளன. ஏழு பதக்கங்கள் மற்றும் ஒரு கண்ணாடி ஹெப்டாகன் (ஏழு பக்க பலகோணம்) பரிசுத்த தளத்தை அலங்கரிக்கின்றன.

விழாக்கள்:

"ஆலய பிரதிஷ்டை" முதலூரின் மிகப் பெரிய திருவிழா ஆகும். புனித மைக்கேல் தினத்தில் (செப்டம்பர் 29) ஒவ்வொரு வருடமும் இது கொண்டாடப்படுகிறது. "அசனம்" என்று அழைக்கப்படும் "அன்னதானம்" விருந்து, உணவு (அன்னம்) பகிர்ந்து உண்ணுவது மற்றொரு பெரிய திருவிழா ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30 அன்று கொண்டாடப்படுகிறது. 29 அல்லது 30 ல் ஞாயிற்றுக் கிழமை வந்தால், அசன விருந்து அடுத்த நாள் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ், மற்றும் ஈஸ்டர் போன்ற பிற மத விழாக்கள் முதுலூரில் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகின்றன.